Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

News: புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

News: புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்கள் தலைமையில் மாநில அளவிலான உயர்மட்டக்குழு (High Level Committee) அமைக்கப்பட்டது. அதனடிப்படையில் பல்வேறு தேதிகளில் கூடி இப்பொருண்மைகள் மீது விரிவான ஆலோசனைகள் / விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரிய கருத்துருக்கள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கருத்துருவில் திருவள் ளூம். காஞ்சிபுரம். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்து புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்குதல் குறித்து மேலே 3 முதல் 8 வரை படிக்கப்பட்ட தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 3 ஊராட்சி ஒன்றியங்களை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இரண்டாக பிரித்திடவும் மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்வதற்கும் கீழ்க்காணுமாறு விவரங்கள் பெறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்:

Post a Comment

0 Comments