அரையாண்டுத் தேர்வுகள் -டிசம்பர்-2025
விடைத்தாள் திருத்தும் பணி சார்ந்து வழிகாட்டுதல்கள் (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும்)
+ டிசம்பர் 2025 இல் நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வுகளை தொடர்ந்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாட்கள் விடைத்தாள் கட்டுக்காப்பு மையத்தை சார்ந்த பள்ளிகளுக்கிடையே பரிமாற்றி மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வெழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் பள்ளியின் பெயர் இடம் பெறுதல் கூடாது.
விடைத்தாளின் முதல் பக்கத்தை மாணவர்கள் காலியாக விட அறிவுறுத்தப்படல் வேண்டும்.
ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தேர்வு முடிந்த பிறகு அன்று மாலை 4.00 மணிக்குள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாட்களை பாடவாரியாகவும், பயிற்றுமொழி வாரியாகவும் தனித்தனி கட்டுகளாக கட்டி தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட Bundle Slip ஐ (இரண்டு நகல்கள்) முகப்பில் வைத்து விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மதிப்பீடு செய்ய வேண்டி ஒதுக்கப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகளை வேறுபள்ளியின் விடைத்தாள்கள் எண்ணிக்கை சரிபார்த்து பெற்றுச் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரும் மாவட்ட அளவில் தயாரித்து வழங்கப்படவுள்ள (Will be apprised only through Edwize Vellore and not by any other mode) அடிப்படையில் மட்டுமே மதிப்பீடு செய்தல் வேண்டும்.
ஏதேனும் குறிப்பிட்ட பாடம் வேறு எந்த பள்ளியிலும் இல்லாத நிலையில் தங்கள் பள்ளி ஆசிரியரிடமே அந்த விடைத்தாட்களை மதிப்பீடு செய்ய வழங்கலாம்.
மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை 29.12.2025 அன்று மாலை 4,00 மணிக்குள் விடைத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
30.12.2025 அன்று மாலை 4.00 மணிக்குள் தங்கள் பள்ளி மாணவர்களின் திருத்தப்பட்ட விடைத்தாள்களை எண்ணிக்கை சரிபார்த்து பெற்றுச் சென்று, மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைக்க வேண்டும்
தேர்வுகள் இல்லாத நாட்களில் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்