அறிவிக்கை எண்.04/2025ற்கான பிற்சேர்க்கை (Addendum). அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் பணி அனுபவச் சான்றிதழ்கள் மட்டும் பதிவேற்றம் செய்தல் கால நீட்டிப்பு.
அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கான அறிவிக்கை στ0001.04/2025, 16.10.2025 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 17.10.2025 முதல் 10.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணிநாடுநர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து பணிநாடுநர்கள் பணி அனுபவச் சான்றிதழ் மட்டும் இணையதளத்தில் வெளியிட்டுள்ள சேர்க்கையில் (Addendum 04-A 27.10.2025) உள்ள படிவங்களில் (Annexure IV, V, VI), இணையதளத்தில் 30.11.2025 வரை உள்ளீடு செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 10.11.2025 வரை விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும், 30.11.2025-க்குள் பணி அனுபவ சான்றிதழ்களை உள்ளீடு செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்