ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகளை பயணிகளிடம் நேரடியாக விநியோகிக்கும் வகையில் உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகளுக்கான பயணச் சீட்டு வாங்கும் வசதியை மேம்படுத்தும் வகையில் உதவியாளர்கள் (எம்-யூடிஎஸ் சகாயாக்ஸ்) நியமிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் பெற ஏற்கெனவே யூடிஎஸ் எனப்படும் கைப்பேசி செயலி வசதி உள் ளது.
இந்த வசதி இல்லாதவர்கள் ரயில் நிலைய பயணச்சீட்டு வழங் கும் மையங்களில் நீண்ட வரிசையில் நின்று பயணச்சீட்டு பெற்று வருகின்றனர். இதைத் தவிர்க்கும் வகையில், எம்-யூடிஎஸ் சகா யாக்ஸ் எனப்படும் பயணச்சீட்டு விநியோக உதவியாளர்கள் ஒப் பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
இப்பணிக்கு திங்கள்கிழமை முதல் (ஆக. 11) விண்ணப்பிக்க லாம். பயணச்சீட்டு விற்பனை செய்யும் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப் பங்கள் மற்றும் விவரங்களை இந்திய ரயில்வே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்