Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

75% வருகை பதிவு கட்டாயம் - வெளியான புதிய செய்தி

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நிகழாண்டு எழுதும் மாணவர்களுக்கு 75 சதவீதம் வருகைப் பதிவு கட்டாயம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பள்ளிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறையைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என் றும், மீறினால் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என் றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.

சிபிஎஸ்இ விதிகளின்படி, பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க குறைந்தபட்சம் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயமாகும். மருத்துவ அவசரநிலை, தேசிய அல்லது சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது போன்ற காரணங்களுக்காக மட்டுமே 25 சதவீதம் வரை தளர்வு அளிக்கப்படும். இதற்கும் தேவையான ஆவணங்களைச் சமர்ப் பிப்பது அவசியம்.

இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத் வாஜ் பள்ளிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'பொதுத் தேர்வுகளை எழுத, மாணவர்களுக்கு 75 சதவீதம் வருகைப் பதிவு கட்டாயம். மாண வர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விதியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். முறையான கோரிக்கை இல்லாமல் மாண வர்கள் விடுமுறை எடுத்தால், அது அங்கீகரிக்கப்படாத விடுமுறையாகக் கருதப்படும். மருத்துவ விடுப்பு எடுக்கும் மாணவர்கள், விடுமுறை முடிந் தவுடன் அதற்கான மருத்துவச் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளிகள் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை நாள்தோறும் புதுப்பித்து, வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி அதிகாரிகளின் கையொப் பத்துடன் பராமரிக்க வேண்டும். சிபிஎஸ்இ அதிகாரிகள் திடீர் ஆய்வு களை மேற்கொண்டு வருகைப் பதிவேடுகளைச் சரிபார்ப்பார்கள். அப் போது வருகைப் பதிவேடுகள் முழுமையற்றதாக இருந்தால், அந்தப் பள் ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்பட கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாணவர்களும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார் கள்' என அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments