Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு செய்தி

பள்ளிக் கல்வி மாணவர்கள் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளி கல்வி /உதவித்தொகை தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறிப்பது விழிப்புணர்வு சுற்றறிக்கை அனுப்புவது - தொடர்பாக
பார்வை:

வேலூர் மாவட்டம், கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் கடிதம் C.No.36/ADSP/CCW/2025, . 07.03.2025

வேலூர் மாவட்டத்தில் பரவலாக, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ / மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலமாக அரசு அலுவலர்கள் பேசுவது போலவும் உயர்நிலை / மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை குறிப்பிட்ட பள்ளியில் படிக்கும் மாணவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள போன்பே (Phone Pe) மூலமாக சிறிய தொகையை 2000/- முதல் 5,000/- வர முன்தொகையாக G.Pay அல்லது போன்பே (Phone Pe) மூலமாக பதிவு செய்து பணத்தை கட்ட வைத்து அல்லது க்யூ ஆர். கோடை (Qr-code) ஐ ஸ்கேன் செய்ய சொல்லி ஏமாற்றி பணம்பறிக்கும் நிகழ்வுகள் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது, மேலும் இது தொடர்பாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனுக்கள் அதிகப்படியாக பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து Scholarship சார்ந்து மோசடி சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ /மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு "சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஸ்காலர்ஷிப் (Schlorship) என்ற பெயரில் நடைபெறும் ஏமாற்று வேலையில் செல்போன் மூலமாகவோ / (WhatsApp) வாட்ஸ்ஆப் மூலமாகவோ யாரேனும் தொடர்பு கொண்டு பள்ளி கல்வித்துறையிலிருந்து அரசு அதிகாரிகள் பேசுவதாக கூறி பணம் கேட்டால் ஏமார்ந்துவிடாமல் இருக்க சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களிடம் கலந்துபேசி உண்மைத்தன்மை உறுதி செய்து கொள்ள மாணவ /மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்குமாறும்,

Post a Comment

0 Comments