Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

புதிய கட்டிடம் கட்ட ஊராட்சியில் அனுமதி பெரும் வழிமுறைகள்

புதிய கட்டிடம் கட்ட ஊராட்சியில் அனுமதி பெரும் வழிமுறைகள்

ஊராட்சியின் அனுமதி பெறப்பட்ட வீட்டுமனைப் பிரிவினை வாங்கியவர்கள் வீடு கட்ட கீழ்காணும் ஆவணங்களின் நகல் மூன்று பிரதிகள் மனை அமைந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

1. கட்டிட வரைபடம் நகல்

2. சம்பந்தப்பட்ட வீட்டு மனையின் பத்திர நகல் மற்றும் பட்டா நகல்.

3. கட்டடத்தின் மொத்த மதிப்பீடு

4. சார்பதிவாளர் அலுவலகத்தில் பெறப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றின் நகல்

5. அனுமதி வேண்டி விண்ணப்பம்

பஞ்சாயத்து தலைவர் இதனை ஆய்வு செய்து, உரிய தீர்மானம் வாயிலாகச் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்குக் கட்டடம் கட்ட உரிமம் வழங்குவார். இதற்கான குறைந்தபட்ச கட்டணமாகக் கட்டுமானப் பரப்பளவுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூபாய்.5 முதல் அதிகபட்சமாக ரூபாய். 10 வரை கட்டணம் விதிப்பார்கள்.

Post a Comment

0 Comments