Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

HOLIDAY - உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு

HOLIDAY - உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2024-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளுார் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் நாளை உள்ளுார் விடுமுறையாக அனுபவிக்கும் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களும் மேற்படி அறிவிக்கப்பட்ட உள்ளுார் விடுமுறைக்கு பதிவாக 2024-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயங்கும்.

மேலே அறிவிக்கப்பட்ட உள்ளுார் விடுமுறை தினம் மாற்றியல் தாள்முறி கூடம் 1881 (மத்திய சட்டம் XXVI / 1881) ன் கீழ் வரும் பொது விடுமுறை இல்லை என்பதால், 2024ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


வேலைவாய்ப்பு கல்வி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-https://whatsapp.com/channel/0029VaATrHl11ulSQkzdHn2M

Post a Comment

0 Comments