Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மகளிர் நல திட்டங்களை அறிய அரசின் உதவி எண் அறிவிப்பு

மகளிர் நல திட்டங்களை அறிய அரசின் உதவி எண் அறிவிப்பு

மகளிர் வாழ்வாதார நலத் திட் டங் களை தெரிந்து கொள்வதற்கான உதவி எண்ணை, தமிழக அரசு அறிவித் துள்ளது.


மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங் கப் படும் கடனுதவிகள், நகர்ப்புற இளைஞர்களுக் காக மத்திய அரசின் கிராமப் புற மேம்பாட்டு அமைச்சகத் தின்கீழ் தீன் தயாள் உபாத் யா ய கி ரா மப்புற திறன் பயிற்சி திட்டம், வேலை வாய்ப்பு முகாம்கள் இளை ஞர் திறன் விழாக்கள் போன் றவையும் நடைமுறைப்ப டுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மகளிர் வாழ்வாதாரம் தொடர்பான வாய்ப்புகள், நலத்திட்டங் கள், நல உதவிகள் குறித்த வழிகாட்டுதல்களை பெற வும், தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனத்தின் திட் டங்கள் குறித்து ஆலோசனை கள் மற்றும் புகார்கள் தெரி விக்கவும் வாழ்வாதார உதவி அழைப்பு எண் அறிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி பொது அலுவ லக வேலை நாட் களில் காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரையில் 155330 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments