Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

JOB VACANCY -மத்திய அரசில் 8,326 காலிப் பணியிடங்கள்விண்ணப்பங்கள் வரவேற்பு

JOB VACANCY -மத்திய அரசில் 8,326 காலிப் பணியிடங்கள்விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய அரசில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்கள், அலுவ லகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள், பணியாளர் தேர்வா ணையம் மூலம் நிரப்பப்படுகின்றன.

அவ்வகையில், எம்டி எஸ் எனப்படும் பன்னோக்கு (தொழில் நுட்பம் சாராத) பணியாளர் பணிக்கு 4,887 காலி இடங்கள் மற்றும் ஹவில்தார் (சிபிஐசி மற்றும் சிபிஎன்) பணிக்கு 3,439 காலி இடங்கள் என மொத்தம் 8,326 காலிப்பணியிடங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பவுள்ளது.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். விருப்பம் உள்ளவர்கள் https://ssc.gov.in 2என்னும் இணையதளத்தில் ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க வேண் டும். மேலும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த ஆக.1 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு தேதி, தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பணியாளர் தேர்வு மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது என மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments