Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

RTO - ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெறலாம் - எப்படி?- முழு விவரங்கள்

RTO - ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெறலாம் - எப்படி?- முழு விவரங்கள்
ஒட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது. பொதுவாக நாம் ஒட்டுநர் உரிமம் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஒ அலுவலகத்திற்கு சென்று ஒட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும்.

ஆனால் ஜூன் ஒன்றாம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. அதில் அதற்கு மாறாக வேறு ஒரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஆர்டிஒ அலுவலகங்களுக்கு மாறாக தனியார் நிறுவனங்களுக்கு ஒட்டுநர் சோதனை நடத்தவும், ஒட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அதன் முழு விவரங்கள்: 

1.https://parivahan.gov.in இணையதள முகவரி பக்கத்திற்கு செல்லவும்.

2.இதில் இணையதள பக்கத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் அப்ளை ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3.இப்போது விண்ணப்ப படிவம் திறக்கும், தேவைப்பட்டால் அச்சிடலாம் .விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்றவும்.

4.இப்போது கொடுக்கப்பட்ட வழிமுறைகளின்படி மீண்டும் நிரப்பவும்.உங்கள் விருப்பத்தைப் பொறுத்து ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

5.விண்ணப்ப செயல்முறையை முடித்த பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் உங்கள் ஒட்டுநர் திறமைக்கான ஆதாரத்தை வழங்குவதற்கும் RTO அலுவலகத்தை அணுகவும்.

6.அனைத்து படிகளையும் சமர்பித்த பிறகு, உங்களுக்கு ஒட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

LICENCE கட்டண விபரங்கள்: 


கற்றல் உரிமம் (LLR) : ரூ 200

கற்றல் உரிமம் புதுப்பித்தல் (LLR Renewal): 200

சர்வதேச உரிமம்: ரூ 1000

நிரந்தர உரிமம்: ரூ 200.


Post a Comment

0 Comments