மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலகங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் / விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ்களை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
1. பிறப்புச் சான்றிதழ்
2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்
3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்
4. நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்
5. இருப்பிடச் சான்றிதழ்
எல்.கே.ஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2020 முதல் 31.07.2021 தேதிக்குள்ளும் 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2018 முதல் 31.07.2019 தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். பள்ளியின் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், மே 28-ம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெறும்.
சேர்க்கைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணாக்கர்களின் விவரம் மற்றும் காத்திருப்போர் விவரம் ஆகியவற்றை மே 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சேர்க்கைக்கு தேர்வான குழந்தைகளின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் அனுப்பப்படும், எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்