Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TNPSC NEWS - டிஎன்பிஎஸ்சி இன்று (11.03.2024) வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்

TNPSC NEWS - டிஎன்பிஎஸ்சி இன்று (11.03.2024) வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்
1.COMBINED LIBRARY EXAMINATION (TAMIL NADU STATE AND SUBORDINATE SERVICES ) (Certificate Verification)-CLICK HERE

2.GROUP-V.A POSTS OF ASSISTANT SECTION OFFICER / ASSISTANT IN SECRETARIAT-RECRUITMENT BY TRANSFER (TAMIL NADU SECRETARIAT SERVICE) (Counselling)-CLICK HERE

3.ஒருங்கிணைந்த நூலகப் பணிகள் / சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)-CLICK HERE

4.தொகுதி V-A (தமிழக தலைமைச் செயலகப் பணி)-இல் அடங்கிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 18.03.2024 அன்று நடைபெற உள்ளது தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)-CLICK HERE

தொகுதி-V-A (தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி)-இல் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 23.08.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 21/2022-ன் வாயிலாக தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 18.12.2022 மு.ப. (ம) பி.ப. அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 01.08.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தொகுதி-V-A (தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி)-இல் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர் /உதவியாளர் பதவிகளுக்கான பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 18.03.2024 மு.ப. / பி.ப. அன்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண் 3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600 003 ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண் / இடஒதுக்கீட்டு விதி / காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய website WWW.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். மேலும் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு பங்கேற்க தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கபட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments