Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC -இன்று (22.03.2024) வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

1.TOURIST OFFICER (TAMIL NADU GENERAL SERVICE) (Certificate Verification)-CLICK HERE
2.தமிழ்நாடு பொதுப்பணிகளில் அடங்கிய சுற்றுலா அலுவலர் பதவிக்கான சான்றிதழ்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)-CLICK HERE

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 03/2023,நாள் 25.01.2023 இன் வாயிலாக தமிழ்நாடு பொதுப்பணிகளில் அடங்கிய சுற்றுலா அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் 07.04.2024 இரவு 11.59 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்) ஆகியவற்றின் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments