Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள செய்தி


தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் நிரப்பப்படாத இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை, TET தேர்வில் தேர்ச்சி பெற்று 2013 முதல் பணிக்காக காத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு மறு நியமனப் போட்டித் தேர்வின்றி உடனே பணி வழங்க வலியுறுத்தி TET ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து நடத்தும்

மாநிலம் தழுவிய மாபெரும்உண்ணாவிரதப் போராட்டம்

இடம் :

D.P.1. வளாகம், நுங்கம்பாக்கம் - சென்னை

நாள் : 28.09.2023 வியாழக்கிழமை

177-ன் படி, 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியும்,

மறு நியமனப் போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் : 149 ஐ நீக்கிவிட்டு, பதிவுமூப்பு ( EMPLOYMENT SENIORITY) அடிப்படையில் பணி வழங்க வேண்டுகிறோம். பணி நியமனத்தின் போது, முன்பிருந்தபடியே ஆசிரியர் பணி பெறும் வயதினை 57 ஆக உயர்த்துதல்

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை முற்றிலுமாக கைவிட்டு, பாதிக்கப்பட்டுள்ள TET ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.







Post a Comment

0 Comments