Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

1,812 தற்காலிக ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு

பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக அடிப்படை யில் நியமிக்கப்பட்ட 1,812 ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.




இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 2008 முதல் 2011-ஆம் ஆண்டு வரையான காலக்கட் டத்தில் தரம்உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் 912 ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இதேபோல், 2012-13-ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இவற் றில் தற்காலிமாக 900 முதுநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்

ஒட்டுமொத்தமாக இந்த 1,812 ஆசிரியர்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது.

இந்தப் பணியிடங்களுக்கு 2027 டிசம்பர் 31-ஆம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதையேற்று தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் தோற்றுவிக் பணியிடங்களுக்கு 2027-ஆம் ஆண்டு வரை தொடர் பணி நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் தாமதமின்றி கிடைக்கும் என்று துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

Post a Comment

0 Comments