Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET NEWS: ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான செய்தி

Teacher eligibility test - ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான செய்தி அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




TET தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை இடை நிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் நேரடியாக பணியமர்த்துவது குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து 25 நாட்கள் ஆகியும் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்காக Tamilnadu Teacher Recruitment Board -ன் மூலம் நடத்தப்பட்ட TET தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை.

 மேலும் அதற்கு மாற்றாக  ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும், மீண்டும் ஒரு நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியராக முடியும் என்ற 149 அரசானை அறிவிக்கப்பட்டன.

இந்த அநீதிக்கு எதிராக TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பாமக துணை நிற்கிறது. அரசாணை 149-ஐ ரத்து செய்து, TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments