Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET LATEST NEWS : ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Teacher eligibility test -ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.






தமிழ்நாட்டில் கோடை விடுமுறை (Summer Holiday) முடிவடைந்து ஒரு வாரத்திற்குள் அரசு பள்ளிகள் திறக்கயிருக்க நிலையில் அதற்கு முன்பாக புதிய ஆசிரியர்களை அமர்த்தியிருக்க வேண்டும். 

ஆனால் கடந்த பத்தாண்டுகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு இணையாக  புதிய ஆசிரியர்கள் (Teacher) நியமிக்கப்படவில்லை. 

இந்த சூழ்நிலை தமிழ்நாட்டு அரசு பள்ளிகளின் கல்விச் சூழலை பாதிக்கும் என்றும்,மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிப்படையும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே ஆசிரியர் தேர்வு வாரியம்  ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments