TAMILNADU-ல் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் அரசு பள்ளி இடை நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட வேலைகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை நடப்பாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று TRB அறிவித்திருந்த நிலையில் மூன்று மாதங்கள் நிறைவடைந்தும் இன்று வரை எந்த அறிவிக்கை வெளியிடவில்லை. அரசு வேலையை எதிர்பார்த்து பலரும் காத்திருக்கும் நிலையில் TRB தாமதம் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாகவும்,மேலும் அரசு School -களிலும், College -களிலும் பல்லாயிரக்கணக்கான Teacher பணியிடங்கள் காலியாக உள்ளன.அவை கடந்த சில ஆண்டுகளாகவே நிரப்பப்படாததால் கற்பித்தல் பணி கடுமையாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
TRB ஆண்டுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை JANUARY மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தால் தான் FEBRUARY மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, APRIL மாதத்தில் போட்டித்தேர்வை நடத்த முடியும்.
அவ்வாறு நடத்தினால் தான் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்குள்ளாக உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அறிவிக்கை வெளியிடப்படாததால் வரும் கல்வியாண்டின் தொடக்கத்தில் உதவிப் பேராசிரியர்களைஅமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
TAMILNADU அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் மேம்பட வேண்டும். கல்வித்தரம் உயர வேண்டும் என்றால் அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் கள் அமர்த்தப்பட வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் GOVERNMENT SCHOOL க்கு இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான
அறிவிக்கையை TRB உடனடியாக வெளி யிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்