குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை அறிவிப்புகள்-2023-2024
சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் டான்சிக்கு சொந்தமான திரு.வி.க. 3.08 ஏக்கர் நிலத்தில் சுமார் 2 இலட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் தமிழ்நாடு சிட்கோ கூட்டு முயற்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு உடன் பயன்படத்தக்க (Plug and Play) வகையில் கீழ்தளம் மற்றும் மூன்றடுக்கு தளங்களுடன் உரிய வசதிகள் கூடிய அடுக்குமாடி தொழில் வளாகம் சுமார் 200 தொழிற்கூடங்களுடன் ரூ.175 கோடி செலவில் உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 2200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டம் டான்சியின் நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்.
2.குறுந்தொழில் முனைவோர்களின் தேவையினைபூர்த்தி செய்யும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் (ஜூஜூவாடி) தொழிற்பேட்டையில் 48,000 சதுர அடி பரப்பளவில் ரூ.26.24 கோடி திட்டமதிப்பீட்டில்தரைதளம் மற்றும் 3 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம் தமிழ்நாடு சிட்கோ மூலம் கட்டப்படும். இத்தொழில் வளாகத்தின் மூலம் 60 குறுந்தொழில் முனைவோர்கள் ஒதுக்கீடு பெற்று பயன்பெறுவர்.
இதன் மூலம் 350 நபர்களுக்கு நேரடியாகவும் நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலை. 200 வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
3.குறுந்தொழில் முனைவோர்களின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை மாவட்டம், கே.புதூர் தொழிற்பேட்டையில் 35,000 சதுர அடி பரப்பளவில் ரூ.22.64 கோடி திட்ட மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம் தமிழ்நாடு சிட்கோ மூலம் கட்டப்படும். இத்தொழில் வளாகத்தின் மூலம் 45 குறுந்தொழில் முனைவோர்கள் ஒதுக்கீடு பெற்றுபயன்பெறுவர்.
இதன் மூலம் 250 நபர்களுக்கு நேரடியாகவும் 150 நபர்களுக்கு வேலை மறைமுகமாகவும் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்