Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கோயில்களில் வேலை- பாதுகாப்பு காவலர்

கோயில் பாதுகாப்பு காவலர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:


திருப்பத்தூர் மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு காவலர் பணிக்கு ஓய்வு பெற்ற காவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு அமர்த்தப்படும் நபர்களுக்கு சம்பளம்: 8500 ரூபாய் 

இந்த வேலை வாய்ப்பு பற்றியும் திருப்பத்தூர் எஸ் பி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

திருப்பத்தூர் மாவட்ட திருக்கோயில்களில் 24 சிறப்பு கோயில் பாதுகாப்பு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமுள்ள 62 வயதிற்குட்பட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுவதாகவும் செய்தி வெளியாகி உள்ளன.

 மனுக்களை எங்கு கொடுக்க வேண்டும்:

ஓய்வு பெற்ற காவலர்கள் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் ,ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் துணை இயக்குனர், முன்னாள் படைவீரர் நலன், வேலூர் எனும் முகவரிகளுக்கு மனுக்களை ஜனவரி 27ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.



Post a Comment

0 Comments