பார்வை 6 இல் கண்டுள்ள செயல்முறைகளின் படி அனைத்து மாவட்டங்களிலும் 2025-2026 ஆம் ஆண்டுக்கான குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அதில் 13.10.2025 வரை தகுதியான / தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பட்டியல் அறிவிப்பு பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்பட வேண்டும் என்றும். தகுதியற்றவை எனில் அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், மேலும் விடுபட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
பார்வை 7 இல் கண்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டம், 2009 திட்டத்தின் கீழ் தகுதியான மாணாக்கர்களின் விவரங்களை பரிசீலிக்கவும், இறுதிப்பட்டியல் வெளியிடவும் 30.10.2025 வரை கால நீட்டிப்பு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அப்பள்ளியின் 25% ஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு இணையாகவோ அல்லது குறைவாகவே இருப்பின் அம்மாணாக்கர்களின் சேர்க்கை பட்டியலினை 30.10.2025 அன்று வெளியிட வேண்டும்.
விண்ணப்பங்களின் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பெறப்பட்ட தகுதியான எண்ணிக்கை அப்பள்ளியின் 25% ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகமாக இருப்பின், அவ்வாறான தகுதியான விண்ணப்பங்களில் சிறப்பு முன்னுரிமைப்பிரிவு குழந்தைகளுக்கு உரிய சேர்க்கை வழங்கிய பின்னர். மீதமுள்ள இடங்களுக்கு மட்டுமே குலுக்கல் முறையில் 31.10.2025 அன்று உரிய வழிமுறையின் படி மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணாக்கர்களின் விவரங்களை அன்றே பள்ளித் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணாக்கர்களின் விவரப்பட்டியல் விடுதலின்றி EMIS தளத்தில் உடனடியாக உள்ளீடு செய்தல் வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) ஆகியோருக்கு தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்