உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும் மாற்றங்களும் ஏராளம்.திரைப்படங்களால் அறம் மற்றும் சமத்துவமற்ற கருத்துகளை, கலந்துரையாடல்களை பற்றி எளிநான வகையில் மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்திவிட முடியும்.
மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும், திரைப்படக் கலையை ரசிப்பதற்கும், கதை, திரைக்கதை, நடிப்பு, உடையலங்காரம், பின்னணி வடிவமைப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு. இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திறனை வளர்க்கும் நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் திரையிடல்கள் நடத்தப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் அனைவராலும் தமிழ்நாட்டில் பாராட்டப்பட்டவற்றுள் மிகவும் முக்கியமானது திரைப்படங்களை பள்ளிகளில் திரையிட்ட நிகழ்வு.
பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, சென்ற ஆண்டை தொடர்ந்து 2025 2026 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணரும் வகையில் ஆகஸ்ட் மாதம் 'தி ஒயிட் பலூன். The White Balloon திரைப்படமானது திரையிடப்பட உள்ளது.
படத்தின் கதைக் கரு, சுருக்கம், குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியவை, உரையாடவேண்டியவை இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
திரையிடுவதற்கு முன்
மாநிலத்திலிருந்து TNSED செயலி வாயிலாக "தி ஒயிட் பலூன் The White Balloon திரைப்படம் பள்ளிகளுக்கு பகிரப்படும். திரையிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இணைப்பு-1 இல் பகிரப்பட்டுள்ள படத்தின் புகைப்படத்தை பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு வைக்க வேண்டும்.
அப்பள்ளியைச் சார்ந்த SMC முன்னாள் மாணவ உறுப்பினர்களில் ஒருவரைத் திரையிடலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கான பொறுப்பாளராகத் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும்.
அவர்கள் சிறார் திரைப்பட மன்ற பொறுப்பு ஆசிரியர் வழிகாட்டுதலின் படி திரையிடப்படவிருக்கும் படத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வர்.
*சிறார் திரைப்பட மன்ற பொறுப்பு ஆசிரியர் மற்றும் ஒருங்கிணைதலுக்கான பொறுப்பாளர்கள் திரையிடலுக்கு முன்பே படத்தைப் பார்த்து, அதன் பொருளை, முக்கியத்துவத்தை உணர்ந்து திரையிடலுக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
திரையிடப்படவிருக்கும் படத்தின் பிரதியைத் திரையிட்டு பார்த்து அதன் திரையிடும் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
திரையிடலுக்குத் தேவையான அறை மற்றும் கருவிகளின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
திரையிடப்படும் அறை, திரையிடலுக்கு ஏதுவான ஒளி, ஒலி குறைவான, அமைதியான இடமாக இருக்க வேண்டும்.
+அந்த அறை இருக்கவேண்டும். காற்றோட்டமான, சுகாதாரமான, பாதுகாப்பான இடமாகவும்
+ படம் பார்க்கும் மாணவர்களுக்குப் போதுமான இருக்கை, குடிநீர்,கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
திரையிடலின் போது
பொறுப்பு ஆசிரியர் மற்றும் SMC உறுப்பினர் திரையிடலுக்கு முன்பு படத்தின் கரு, அதன் பின்னணி, அதைத் திரையிடுவதற்கான காரணம் போன்றவற்றை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
திரையிடப்படும் படம் தமிழ் அல்லாத பிறமொழியாக இருக்கும் வேளையில் அந்தப்படத்திற்கு நேரடி மற்றும் சுருக்கமான மொழிபெயர்ப்பைத் தலைமை ஆசிரியரோ,ஆசிரியரோ, பள்ளி மேலாண்மைக்குழுவிலுள்ள முன்னாள் மாணவரோ அல்லது பொது முன்னாள் மாணவரோ அல்லது எல்லோரும் இணைந்தோ செய்ய வேண்டும்.
திரையிடப்படும் படத்தில் பணி புரிந்தவர்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் பிற செய்திகளை எழுத்து வடிவில் வரும்போது அதை முழுமையாகப் பார்க்கும்படி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
+ குறிப்பாகப் படம் முழுமையாக முடியும் வரை விளக்குகளை அணைத்தே வைத்திருக்கவேண்டும்.
திரையிட்ட பின்
திரையிடலுக்குப் பிறகு மாணவர்களை மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் (House systems 5 groups) வாரியாக பிரித்து 5-6 மாணவர்கள் கொண்ட சிறு குழுக்களாக பிரிக்க வேண்டும். (பெண், ஆண், திருநர், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் என ஒருங்கிணைந்த குழுவாக இருப்பது அவசியம்).
கதைக்கரு மற்றும் படத்திலிருந்து பெறப்பட்ட * படத்தின் அனுபவத்தைப் பற்றிக் கலந்தாலோசித்து விவாதிக்க நேரம் கொடுக்கப்பட வேண்டும்.
மாநிலத்திலிருந்து படம் சார்ந்து பகிரப்பட்ட கலந்துரையாடலுக்கான தலைப்புகள் அல்லது கேள்விகள், மாணவர் குழுக்களிடம் பகிரப்பட்டு உரையாடலை ஊக்குவிக்க வேண்டும்.
அக்கேள்விகள் அப்படத்தின் கதைக்கரு, வடிவம், குறிப்பிட்ட காட்சிகள், தொழில்நுட்பக் குறிப்புகள்,அந்தப்படம் கொடுத்த அனுபவம் மற்றும் செய்தி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இருக்கலாம்.
கலந்துரையாடலின் கருத்து குறிப்புகளை ஒவ்வொரு குழுவும் முன் வந்து ஒலி வாங்கியைப் பயன்படுத்தி எல்லோருக்கும் பகிர ஊக்குவிக்கவேண்டும்.
திரையிடலை ஒருங்கிணைக்கும் ஆசிரியர். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்துரையாடலில் மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று விளக்கங்களை, மாணவர்கள் கவனிக்கத் தவறிய கூறுகளைப் பகிரலாம்.
+ கலந்துரையாடலுக்கு உரிய முக்கியத்துவமும் போதுமான நேரமும் வழங்கப்படவேண்டும்.
இணைப்பு:
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்