Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

1,066 சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி போராட்டம் அறிவிப்பு

1,066 சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி போராட்டம் அறிவிப்பு
காலியாக உள்ள 1,066 சுகாதார ஆய்

வாளர் (நிலை 2) பணியிடங்களை நிரப்பக் கோரி, மார்ச் 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தர்னா போராட்டம் நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப் பாளர் ப.குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

பொது சுகாதாரத் துறையில் துணை சுகாதார நிலைய அளவில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் தற்போது ஏறத்தாழ 100 சதவீதம் நிரப் பப்படாமல் காலியாக உள்ளன.

மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சுமார் 1,066 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப் பாணை கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இருந்த பல்வேறு குறைபாடுகள் கார ணமாக பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு வழக்குகள் தொடர்ந்ததால் அறிவிப்பாணை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தர விடப்பட்டது.

ஆனால், இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வா ணையத்தால் புதிய அறிவிப்பாணை எதுவும் வெளியி டப்படவில்லை. தற்போது 100 சதவீத பணியிடங்களும் அதாவது சுமார் 1,066 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

அந்த பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார் பாக இரண்டு கட்ட போராட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக மார்ச் 27-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை நேர தர்னா போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும். அடுத்தகட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments