Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC GROUP IV -குரூப் 4 இறுதி விடைத்தாள், ஓஎம்ஆர் நகல் பணி நியமனத்துக்கு முன் வெளியிடணும்- புதிய செய்தி

TNPSC GROUP IV -குரூப் 4 இறுதி விடைத்தாள், ஓஎம்ஆர் நகல் பணி நியமனத்துக்கு முன் வெளியிடணும்- புதிய செய்தி 
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேட்டுப் பட்டியைச் சேர்ந்த முத் துலட்சுமி, திருச்சி முத்து செல்வம் உட்பட பலர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு

தமிழ அரசுப் பணியில் காலியாக உள்ள 6 ஆயி ரத்து 244 பணியிடங்களை திரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு க்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணை யம் கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. தமி ழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு ஜூன் 9 ம் தேதி நடந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிந்தவுடன், பணி நிய மன அறிவிப்புக்கு முன்னர், தேர்வுகள் முடிந்த பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு இறுதி விடைத்தாள் மற்றும் ஓஎம்ஆர் தாள் நகலை வெளியிட வேண்டும்.

ஆனால், டிஎன்பிஎஸ்சி அவ்வாறு வெளியிடாது. பணி நியமன செயல்முறைக்கு பின்னரே டிஎன்பிஎஸ்சி வெளியிடும். இதனால் தேர்வர்கள் பாதிக்கப்படுவர் ஆசிரியர் தேர்வு வாரியம், நீதித்துறை பணிக்கான தேர்வுகள் நடந்து முடிந்தவுடன் இறுதி விடைத்தாள், ஒஎம்ஆர் தாள் நகல் வெளியி டப்படும். எனவே, சமீபத் தில் நடந்து முடிந்தடிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் ஓஎம்ஆர் தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடும் முன்பு வெளியிட உத்தரவிட வேண்டும்

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, "ஜூன் 9ம் தேதி நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் மற்றும் ஒஎம் ஆர் தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளி யிடுவதற்கு முன் டி என்பி எஸ்சி வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments