அரசு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய நான்கு சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 6 புதிய பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலக மாணவர்களுக்காக சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் 21 கோடி மடிப்பீட்டில் கட்டப்படும்.
அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கு என தனி ஓய்வறைக் கட்டிடம் 8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
கோவை, சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்த எந்திரனியல் ஆய்வகம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
GATE, IES, CAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை 500 லிருந்து 1400 ஆக உயர்த்தப்படும். இதற்காக கூடுதலாக 77 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்படும்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் ₹7.05 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்
தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாறு ஆராய்ச்சி மன்றம் மீள்ருவாக்கம் செய்யப்படும்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்.
-பொன்முடி, உயர்கல்வித் துறை அமைச்சர்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்