Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET TEACHER: ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு- 11 காலி பணியிடங்கள்


சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்காணும் பணியடத்திற்கு கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

இடை நிலைஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்கள்:

வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்)


இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை

வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரயர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET)

பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்:
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள்.

பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள்(இல்லையெனில்).

மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள்(இல்லையெனில்) அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள்.

காலிப்பணியிட விவரங்கள்:
மொத்த காலிப்பணியிடங்கள் -11 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08.09.20123 மாலை 5.45 மணிக்குள்.



Post a Comment

0 Comments