Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தனித் தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு அக்டோபர் 2023


2024 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் கைவினஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இதற்கான தகுதிகள்


என்ன என்ன தகுதிகள் பற்றிய ஒரு முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1) ஏதேனும் ஒரு தொழிற் பிரிவில ஐ.டி.ஐ.-ல் பயின்று தேர்ச்சிபெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied தொழிற் பிரிவில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2) திறன் மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (CEO NTC)பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடையதொழிற்பிரிவில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 3) ஆகஸ்டு 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற் பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவில் பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

4) தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

5) ஆகஸ்டு 2019 ஆம் ஆண்டில் SCVT திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யபப்பட்டு தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் தனித் தேர்வராக விண்ணப்பித்து முதன்மை தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வுக்கு அனுமதிக்கப்டுவர்.

6) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18.09.2023 அன்று 21 வயது பூர்த்திசெய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை. 

7) இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜுலை 2024-ல் நடைபெறவுள்ள இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வராக கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார். இத் தொழிற்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற்சான்று (NCVT) வழங்கப்படும்.

Post a Comment

0 Comments