விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக 09.05.2023 (பிற்பகல்) முதல் 13.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள Web Camera வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து உரிய தேர்வுக் கட்டணத்தினை செலுத்தவேண்டும்.
சிறப்பு அனுமதித் திட்டம் (TATKAL)
09.05.2023 முதல் 13.05.2023 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் ( TATKAL ) 15.05.2023 மற்றும் 16.05.2023 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதிக் கட்டணமாக கூடுதலாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.
பொதுவானஅறிவுரைகள்:
தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
தேர்வர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.
போதிய சமுக இடைவெளி கடைபிடிக்கவேண்டும்.
தேர்வுக் கட்டணவிவரம்
ஒவ்வொருபாடத்திற்கும்-ரூ.50/-
மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு)ரூ.100/-
மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு)-ரூ.100/-
பதிவு மற்றும் சேவை கட்டணம்-ரூ.15/-
ஆன்லைன் பதிவு கட்டணம்-ரூ.70/-
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்