பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் ஆரம்பமாகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் English கேள்வித்தாளில் கேள்வி எண்கள் 4, 5, 6-ல் நேர்ச்சொல், எதிர்ச்சொல் ஆகியவை கேட்கப்பட வேண்டியதில், நேர்ச்சொல் மட்டும் கேட்டிருந்ததாகவும், ஏற்கனவே நடந்த வகுப்பு தேர்வுகளில் இது போன்று வினாக்கள் கேட்காததால் மாணவ-மாணவிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் புகார்கள் எழுந்தன.
மேலும் question paper-ல் 28-வது எண் வினாவும் தவறாக கேட்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண் டும் என்று ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை ஏற்று அரசு தேர்வுதுறை மதிப்பெண் வழங்கி மாணவ-மாணவிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது.
அதன்படி, பத்தாம் வகுப்பு பொது தேர்வு English exam 4, 5, 6 ஆகிய கேள்விகளுக்கு மாணவர்கள் விடை எழுத முயற்சித்து இருந்தால் தலா ஒரு மதிப்பெண் வீதம் 3 மதிப்பெண்களும் அதே போல் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்பட்ட 28-வது வினா வுக்கும் விடையளிக்க முயற்சி செய்திருந்தால் 2 மதிப்பெண்களும் என மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்க தேர்வுதுறை முடிவு செய்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விடைகுறிப்புகளிலும் இதை தெளிவாக குறிப்பிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்